“Book Descriptions: தமிழ் சினிமாவில் வெளிவரும் பெரும்பாலான நாயக வழிபாட்டுத் திரைப்படங்கள், அடிப்படையில் தங்கள் கதை சொல்லல் முறையில் ஒரு காப்பியத் தன்மையைக் கொண்டுள்ளன. வாழ்க்கை விதிகளின் படி, நல்லவர்கள் எவ்வளவு தூரம் சிரமங்களை அனுபவித்தாலும், கெட்டவர்களால் துன்புறுத்தப்பட்டாலும், கடைசியில் எப்படியாவது நீதி வென்றுவிடும். வெற்றி நல்லவர்களுக்கே கிடைக்கும். இதுதான் காப்பியங்களும் புராணங்களும் நமக்கு உணர்த்தக்கூடிய செய்தியாக இருக்கிறது. இந்த மரபின் நீட்சியாகத்தான் தமிழ் சினிமா நாயகர்கள், அநீதிக்கு எதிராகப் போராடி நீதியை நிலைநாட்டுபவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.
ஆனால் யதார்த்தத்தில் மனிதர்கள், அன்றாடம் அல்லல் படுபவர்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பன்னெடுங்காலமாகவே இந்த உலகம் வலிமையானவர்களுக்கு மட்டுமானதாகவே இருக்கிறது. தமிழ் சினிமாவில் காட்டப்படுவதைப் போன்ற “எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை” த்தனமான வாழ்க்கை எல்லோருக்கும் அமைவதில்லை. பிரச்சனைகளுடன் போராடுவதிலேயே தங்கள் பெரும்பகுதி வாழ்நாளைக் கழிப்பவர்கள் இங்கு அனேகம். இந்த உண்மையைப் பதிவு செய்வதன் வழியாகத்தான் இலக்கியங்கள் ஒரு மகத்தான நிலையை அடைகின்றன. இருத்தலியல் தத்துவத்தின் எழுச்சிக்குப் பிறகு பெரும்பாலான இலக்கியங்கள் மனித வாழ்வின் வீழ்ச்சிகளைப் பதிவு செய்துவரும் நிலையில், சினிமாவில் பணியாற்றும் மனிதர்களினூடே இந்த உலகத்தின் அசலான அவலத்தைப் பேசும் நாவலாக அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் இருக்கிறது.” DRIVE