“Book Descriptions:"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு, யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.
நிலம், இயற்கை, பண்பாடு, நீதி, விழுமியங்கள் யாவும் விற்பனைப் பண்டமாக மாறிக்கொண்டிருக்கும் சூழலில், ஒரு தாவரத்தைக் காட்டிலும் பெருந்தச்சர்கள் ஆக்கிய தேர் பெரிதில்லை என்பதறிந்த இயற்கையாளன் பாரி, மீளாக்கம் செய்யப்படுவது காலத்தினால் நிகழும் அற்புதம்.
தமிழரின் நாகரிகம், சிந்தனை மரபு, இயற்கை அறிவு, விஞ்ஞானம், கலை இலக்கிய நுண்திறன், வீரம், காதல், வாழ்வு என பெரும் வரலாறு ஒன்றைப் புனைவின் துணையோடு கவிதையின் மொழியில் சித்திர நுட்பத்தில் ஆக்கித் தந்திருக்கிறார் சு.வெங்கடேசன்.
மொழியாலும் புனைவாலும் மதம்பிடித்த ஒருவரால் மட்டுமே இப்படியொரு காவியத்தை உருவாக்க முடியும்.
வரலாறு, இலக்கியத்தின் வாயிலாக இத்தனை அரசியல் சரிநிலையோடு மீளுருவாக்கம் செய்யப்படுவது நவீன சூழலில் இதுவே முதல்முறை.” - வெய்யில்” DRIVE