“Book Descriptions: தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம். எந்த ஊர், பெற்றோர், என்ன சாதி, என்ன இனம் என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொது மனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின் மூலம் இந்த வாழ்க்கையின் போக்கு குறித்த புரிதலை உணர்த்த முனையும் நாவல் இது. எழுதப்பட்டு ஏறத்தாழ முப்பத்தைந்தாண்டுகளாகிவிட்ட பின்னரும் இன்றைய சூழலுக்கு பொருந்துவதான வாசிப்பனுபவத்தைத் தருவதன் மூலம் இந்த நாவல் ஒரு கலைப்படைப்பாக நிமிர்ந்து நிற்கிறது. தாழ்ந்தவர்கள் எழுந்தால், வீழ்ந்தவர்கள் எழுந்தால் அவர்கள் உன்னதமாய் விளங்குவார்கள் என்பது நமது நம்பிக்கை மாத்திரமல்ல அனுபவத்தின் சிதறலே இந்தக் கதையாகும்.” DRIVE