“Book Descriptions: மோகமுள் பற்றிப் பொதுவாக அது நல்லதோர் நாவல், மிகவும் சிறப்பாக அமைந்துவிட்ட ஒரு உன்னதமான சிருஷ்டி, ஜானகிராமனின் மிகச்சிறந்த முயற்சி என்று சொல்வதற்கு மேல் விரிவாக எதுவும் சொல்ல வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. குணசித்திரங்களும் சந்தர்ப்பச் சுழ்நிலைகளும் சம்பவங்களும் களன்களும் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளன. சங்கீத விஷயத்தின் மூலம் நாவலில் ஏற்படுகிற ஒரு ஆழம் உண்மையானதாக, உயர்வானதாக அமைந்துள்ளது. தஞ்சை ஜில்லாப் பேச்சுப் போக்கை, வாழ்ககைப் போக்கை அப்படியே, ஜானகிராமனுக்கே உரிய ஒரு திறமையுடன், தீட்டியிருக்கிறார். நாவலாகக் கட்டுக் கோப்பும் சிறப்பாகவே அமைந்து விட்டது. இந்த நாவல் பற்றி இலக்கியத தரம் அறிந்தவர்கள் பெருமைப்படலாம். மனிதனின் பலத்தையும் பலஹீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள மோகமுள், தமிழில் நல்லதோர் சாதனை - பெரியதோர் சாதனை” DRIVE