“Book Descriptions: ஒரு சினிமா எடுப்பவனாலும், ஒரு எழுத்தாளனாலும் தான் பல கதைகளில் பல கதாப்பாத்திரங்களில் வாழ முடிகிறது, ஒரு சாமானியனால் கற்பனை மட்டுமே செய்ய முடிகிறது. ஆனால் ஒரு எழுத்தாளனால் அவனது எழுத்தால் அதை காட்சிப்படுத்தி பலருக்கும் அந்த அனுபவத்தை கொடுக்கவும் முடிகிறது. நான் வருங்காலத்தில் மருத்துவர் ஆனாலும், ஒரு எழுத்தாளனாகவே எனது வாழ்க்கை முழுமை பெரும் என்பதை ஆழமாக நம்புகிறேன். வாழ்க்கையில் நாம் அன்றாடம் சந்திக்கும் எதார்த்தமான மனிதர்களும் கதைகளும் தான் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. ஆகையால் தான் 'கதைகள் சொல்லும் நடப்பியம்' என்று தலைப்பு வைத்துள்ளோம். இங்கு எந்த தனி மனிதனின் செயலும் அவன் ஒருவனால் முடிவு செய்யப்படுவதில்லை, அவனுடைய சூழ்நிலை, அவனை சுற்றி இருக்கும் மனிதர்கள், சமூகம் என பல காரணிகள் உள்ளன. பல வகையான கதாப்பாத்திரங்களும், அவர்களது செயல்களும், கதைக்களங்களும் ஒரு சேர ஒரே புத்தகமாக பல அனுபவங்களுடன் வாசகர்களாகிய உங்களிடம் வந்து சேர்கிறது. வாசித்து மகிழுங்கள்” DRIVE