“Book Descriptions: நான் ஏற்கனவே ஏற்றப்பட்டிருக்கிறேன். இனியும் தீ வேண்டாம். இன்னும் சில இருக்காஞ்சட்டி விளக்குகளை ஏற்றுகிறபொழுது வரைக்கும் எண்ணெய் இருக்கும் என் திரியில். என்னுடைய மாடங்கள், என்னிடமிருந்து கசிந்த எண்ணெய்க் கங்குகளாலும், புகைப்படிவுகளாலும் நான் நின்று எரிந்ததற்கு அடையாளம் சொல்லும். இனிவரும் நாட்களிலும் வாசலில் வந்து வியாபாரம் செய்யும் மரபு மிச்சப்படும் எனில், அபிஷேகப்பட்டி அல்லது மாறாந்தையிலிருந்து பனங்கிழங்கு விற்க வந்த கிழவி என் எண்ணெயைத் தொட்டு உச்சி வகிட்டில் வைத்துக் கொள்வான்.” DRIVE