“Book Descriptions: உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும்.
வாழ்க்கையின் புதிர்களை வாழ்க்கைக்குள் வைத்து விளங்கிக் கொள்ள இயலாது போகும்போது அவற்றை வாழ்க்கைக்கு அப்பால் கொண்டு சென்று விளங்கிக்கொள்ள முயன்ற தொல்மனத்தின் முயற்சிகள் இவை. உலக இலக்கியத்தின் பெரும் படைப்பாளிகள் பலரும் பேய்க் கதைகளை எழுதியுள்ளனர்.
எப்போதுமே மனித மனங்களின் உச்சங்களை அறிவதில் ஆர்வம் கொண்டவன், எழுத முனைபவன் என்ற வகையில் நான் ஏற்கெனவே தொடர்ந்து பேய்க் கதைகளை எழுதி வந்துள்ளேன். அவற்றின் உளநுட்பங்களும் கவித்துவ ஆழங்களும் என் வாசகர்களால் பெரிதும் உணரப்பட்டும் உள்ளன.
வாழ்க்கையைக் கற்பனை மூலம் அறிய முயல்பவர்கள் தினம் தினம் காணும் பேய்கள் பல. அவனுள் குடிகொண்டுள்ள பேய்களோ பற்பல. இத்தொகுப்பில், முற்றிலும் அப்படிப்பட்ட கதைகளால் ஆன ஓர் உலகை உருவாக்கியுள்ளேன். குற்றம், பாவ உணர்ச்சி, தனிமை ஆகியவற்றின் வெளிப்பாடுகளாகவே இக்கதைகளைக் காண்கிறேன். ஜெயமோகன்” DRIVE