“Book Descriptions: சோழ சேர, பாண்டிய நாடுகளாகத் தமிழ்நாடு முப்பெரும் வேந்தர்களால் பிரித்து ஆளப்பட்டு வந்தாலும்; தமிழ்நாடு மொழியால், இனத்தால் ஒன்று தான். 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்று சங்கப் புலவர் பாடியது முதலில் நமக்காகத்தான். இந்த வரலாற்றுப் புதினத்தில் பாடினிப் பெண்ணும், பாண்டிய நாட்டு வீரனும் அந்தப் பாடலின் கருத்தை வலியுறுத்துகிறார்கள். பல்லவப் பெரு நாடு காவிரிக்கரை வரை விரிந்து பரந்திருந்த காலத்தில், அபராஜித வர்மன் பல்லவ நாட்டை ஆண்டு கொண்டிருந்த வேளையில் பல்லவ நாட்டின் தெற்கு எல்லையில் சில பகுதிகள் பாண்டியர்கள் வசமிருந்தன. அப்போது சோழ நாடு தஞ்சையைச் சுற்றியுள்ள சின்னஞ்சிறு பகுதியை மட்டும் கொண்டிருந்தது. விஜயாலய சோழனும், அவரது மகன் ஆதித்தனும் சோழ நாட்டை விரிவுபடுத்த தக்க தருணத்தை எதிர்நோக்கியிருந்தனர். இந்த வரலாற்றுப் புதினம் அந்தச் சூழ்நிலையை நிலைக்களமாகக் கொண்டு திகழ்கிறது. பரந்த உள்ளமுடைய பாடினிப் பெண் பிறந்த மண்ணுக்குத் துரோகம் செய்யாமல், காதலிலும் வெற்றியடைந்ததைக் கற்பனைச் சம்பவங்களாகச் சரித்திரப் பின்னணியுடன் கூறுவதே இந்தப் புதினம். - விக்கிரமன்” DRIVE