BookShared
  • MEMBER AREA    
  • ஐந்து வழி மூன்று வாசல் [Aindhu Vazhi Moondru Vaasal]

    (By Indra Soundar Rajan)

    Book Cover Watermark PDF Icon Read Ebook
    ×
    Size 24 MB (24,083 KB)
    Format PDF
    Downloaded 626 times
    Last checked 11 Hour ago!
    Author Indra Soundar Rajan
    “Book Descriptions: 'கோட்டைபுரத்து வீடு' என்கிற பரபரப்பான தொடரினை ஆனந்த விகடனில் எழுதின கையோடு அதன் வெற்றிக்கான ஒரு பரிசாக நான் உடனடியாகப் பெற்ற மற்றொரு தொடர் இந்த 'ஐந்து வழி - மூன்று வாசல்!'.

    ஆனந்த விகடனில் எழுத வாய்ப்புக் கிடைப்பதே அரிய விஷயம். அதிலும் அதன் வைர விழா ஆண்டில் வாய்ப்புக் கிடைப்பது என்பது பாக்கியமான ஒரு விஷயம். தான் பாக்கியம் செய்வதன் என்பது பின்பே எனக்குப் புரிந்தது. கிடைத்த சந்தர்ப்பத்தை எல்லா வகையிலும் சிறப்பாகப் பயன்படுத்தத் திட்டமிட்டு புதுமையான இந்த இரட்டைத் தொடரைப் படைத்தேன். யாரும் இதற்கு முன் செய்திருக்கக்கூடாது; அதே சமயம் வழக்கம் போலவும் இருக்கக்கூடாது - என்கிற அடிப்படையில் இந்த சரித்திர + சமுக தொடர் முயற்சிக்கு நான் முனைந்தபோது முளையிலேயே இதன் வீர்யத்தைத் துல்லியமாக உணர்ந்து என்னைப் பெரிதும் ஊக்குவித்தார் விகடன் ஆசிரியர் அவர்கள்.

    நடுநடுவே என் கற்பனை ரசம் கரடுமுரடுகளில் சிக்கிடாதபடி எனக்கு முன்னே ஒரு சாரதிபோல் அமர்ந்து வழிப்படுத்தியும் தந்தார். விகடனில் தொடர் எழுதுவது என்பது ஒரு எழுத்தாளனுக்கு பெருமைக்குரிய விஷயம் மட்டுமல்ல பயிற்சி, நுட்பம் போன்ற பல விஷயங்களுக்கு அடிப்படையான ஒன்றும்கூட.

    என்னைப் பொருத்தமட்டில் இந்த தொடர் எனக்கு மகத்தான அனுபவங்களைத் தந்தது. பேசவே இனிக்கும் இனிய தமிழில் தங்கு தடையின்றி எழுதி மகிழ சரித்திரம் வாய்ப்பளித்தது. நிகழ் காலத்தில் நான் நடைபோட சமூகம் வாய்ப்பளித்தது. சமூகத்தைவிட சரித்திரக்கதை அனேக வாசகர்களை மிகுதியும் கவர்ந்திழுக்கவும் செய்தது.

    சரித்திரக் கதையை நான் வெறும் கற்பனைச் சரக்காக விரும்பவில்லை. நிஐ சரித்திரம் ஒன்றின் பரபரப்பான பகுதிக்காக நூலகங்களில் தவம் கிடந்தேன். நானிருக்கிறேன் என்பதுபோல் அகப்பட்டார் புலித்தேவர். தென்றல் சிலிர்க்க மனக்கண்ணின் கொட்டி முழுக்கியது அவர் வசித்த மேற்குத் தொடர்பு மலைப்புரங்கள். இந்த நாட்டு விடுதலைக்காப் பாடுபட்ட இவரை விடவா ஒரு பவித்ரமான மனிதர் எனக்குக் கிட்டிவிட முடியும்? இவரோடு கூடி பல கற்பனைப் பாத்திரங்களை இணைத்தேன்... கதையை வளர்த்தேன். அவர்களில் ஐம்னாலால் என்னும் அந்த வடக்கத்தியர் வாசகர் உள்ளங்களைப் பெரிதும் கொள்ளை கொண்டுவிட்டார். தொடரின் சோக முடிவு பலரைப் பாதித்ததை நேரில் கடிதத்தில், தொலைபேசியில் என்னால் அறிய முடிந்தது. புதுமை முயற்சி வெற்றிக் கொடியைப் பறக்கட்டதில் என் பேனா குதூகலப்பட்டது.

    'ஐனரஞ்சகமான இதழ்களில் சுவாரஸ்யமாகத்தான் கதை சொல்ல முடியும். அனுபவ பூர்வமாக மிக எதார்த்தமாக வாழ்க்கையை வாழ்க்கையாக நல்ல தீர்வுகளோடு காட்டமுடியாது' என்பது இன்று பலரின் நம்பிக்கை. நான் அதை அவ்வப்பொழுது மீற விரும்புகிறேன். எனது இந்த இரட்டைத் தொடரைப் போலவே ஒரு தொடரை அமரர் கல்கி அவர்கள் முன்பே எழுதியிருப்பதாக ஒரு வாசகர் எனக்குக் கூறியபோது எனக்குள் ஆச்சரியம்!

    'ஆனால் அது சற்றே பூர்வ ஜென்ம வாசனையைக் கொண்டது. உங்களது முற்றிலும் சரித்திரம்! அடிப்படையில் நிறைய வேற்றுமைகள் உண்டு' என்றும் குறிப்பிட்டார். எனக்கு முற்றிலும் புதிய தகவல் அது. என்றோ அமரர் கல்கிக்குத் தோன்றிய ஒரு முனைப்பு இன்று எனக்கும் ஏற்பட்ட அந்த ஒற்றுமை எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

    மகத்தான அந்த எழுத்தாளரின் பாதையில் நான் நடந்திருப்பது தெரிந்தபோது புளகாங்கிதமாக இருந்தது. இதற்கு மதிப்புரை தந்திருக்கும் திரு. கெளதம நீலாம்பரனும், பாலகுமாரனும் நான் மிக மதிக்கும் எழுக்கும் எழுத்துலக வேங்கைகள். இளைய தலைமுறையில் பழுத்த அனுபவத்தோடு சரித்திரம் படைப்பதில் கெளதமநீலாம்பரன் தான் இன்று முன் நிற்பவர். முதல் சந்திப்பிலேயே எவராகை இருந்தாலும் அவரிடம் நல்ல மதிப்பைச் சம்பாதித்திக் கொள்ளும் பழகும் தன்மை இவரது மிகப்பெரிய பலம். பக்குவமான சொற்கள், பரந்த பதமான உச்சரிப்பு... பத்திரிக்கைத் துறையில் இவர் ஒரு சிறந்த மனிதர்.

    தத்துவ பூர்வமாக வாழ்க்கையை அலசும் வல்லாளர் பாலகுமாரன்,கவிதைகளில் தான் இவர் முதலில் என்க்கு அறிமுகமானவர். கதைகளில் இவர் காட்டும் எதார்த்த உடையாடல்கள் பல நூற்றாண்டு வாழும் தன்மை கொண்டவை. நுனிப்புல் மேயவே இவருக்குத் தெரியாது என்னும்படியான ஒரு அழுத்தத்தை இவரின் ஒவ்வொரு படைப்பிலும் காணமுடியும். எழுத்தின் சக்தியை இவர் மூலம் நாம் பலருக்கு அடையாளம் காட்டலாம்.

    இவர்கள் இருவரின் மதிப்புரைகளுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.”

    Google Drive Logo DRIVE
    Book 1

    கோபல்ல கிராமம் (Gopalla Gramam)

    ★★★★★

    கி. ராஜநாராயணன்

    Book 1

    தேசாந்திரி [Desanthiri]

    ★★★★★

    S. Ramakrishnan

    Book 1

    வீரயுக நாயகன் வேள்பாரி, இரண்டாம் தொகுதி

    ★★★★★

    Su. Venkatesan

    Book 1

    velichathin niram karuppu 2

    ★★★★★

    mukilan

    Book 1

    கள்வனின் காதலி [Kallvanin Kadhali]

    ★★★★★

    Kalki

    Book 1

    அரியநாச்சி [Ariyanachi]

    ★★★★★

    வேல ராமமூர்த்தி

    Book 1

    One Part Woman

    ★★★★★

    Perumal Murugan

    Book 1

    The Immortals of Meluha (Shiva Trilogy, #1)

    ★★★★★

    Amish Tripathi

    Book 1

    நைலான் கயிறு [Nylon Kayiru]

    ★★★★★

    Sujatha

    Book 1

    அலை ஓசை [Alai osai]

    ★★★★★

    Kalki

    Book 1

    கடல் புறா 2 [Kadal Pura] (கடல் புறா, #2)

    ★★★★★

    Sandilyan

    Book 1

    மன்னன் மகள் [Mannan Mahal]

    ★★★★★

    Sandilyan

    Book 1

    கடல் புறா 1 [Kadal Pura] (கடல்புறா, #1)

    ★★★★★

    Sandilyan

    Book 1

    மலை மாளிகை [Malai Maaligai]

    ★★★★★

    Sujatha