“Book Descriptions:கடல் மோகினியை நாடிச் செல்வதிலிருந்த பேராபத்தைக் கலவரத்துடன் பலவர்மன் எடுத்துரைக்க முயன்ற நேரத்திலேயே திடீரெனத் தென்மேற்குப் பருவக் காற்று ஊ ஊ என்ற சத்தத்துடன் ஊழிக்காற்றாக மாறிவிட்டதையும் அந்தக் காற்றின் பயங்கர ஒலியையும் கிழித்துக் கொண்டு எச்சரிக்கைக் கூச்சலொன்று நடுப் பாய்மரத்தின் உச்சியிலிருந்து எழுந்ததையும் கவனித்த இளையபல்லவன், கையிலிருந்த திசை காட்டும் கருவிப் பேழையைக் கண்டியத்தேவனிடம் கொடுத்து அதை மீண்டும் தனது அறைக்கு எடுத்துச் செல்லுமாறு உத்தரவிட்டுப் பக்கத்திலிருந்த பலவர்மனைப் பற்றிச் சிறிதும் சட்டை செய்யாமல் தனது மேலங்கியைக் கழற்றித் தளத்தில் எறிந்துவிட்டுக் காலிலிருந்து இடுப்புவரை மறைத்திருந்த சீனத்துச் சர” DRIVE