“Book Descriptions: தென் தமிழ்நாட்டில் வசித்த தென்கலை ஐயங்கார் குடும்பம் ஒன்றின் நான்கு தலைமுறைகளின் வாழ்க்கை, படர்ந்து விரிகிறது இந்த நாவலில். எப்போதோ நடந்த நிகழ்வு ஒன்றில் பிறந்த சாபம் தங்களைத் தலைமுறை தலைமுறையாகத் துரத்துகிறதோ என்ற ஐயம் அந்தக் குடும்பக் கதையின் பின்திரை. படுத்த படுக்கையாக இருக்கும் பொன்னாபாட்டி தன் நினைவுகளுடன் போராடிக் கொண்டிருக்கிறாள். சிதறுண்டுபோன, மங்கலான அவளது உலகினுள் அவளது கொள்ளுப் பேரன்களான நம்பியும் கண்ணனும் நுழைகிறார்கள். மரணத்தின் மடியிலும் மறதியின் இருளிலும் புதைந்துபோன தமது மூதாதையரின் வாழ்வைத் தோண்டி எடுக்கிறது அவர்களது தேடல்.” DRIVE