“Book Descriptions: எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். நீர், நிலம், காற்று, கேள்விகள். உயிர் வாழ்வதற்கு இவை அத்தியாவசியம். புத்தர் துறவு மேற்கொண்டது ஏன்? ஆசையை விட்டொழித்து அன்பை போதிக்க. இது ஒரு பதில். அரண்மனை வாழ்க்கை போரடித்ததால். இதுவும் ஒரு பதில்.
எல்லாக் கேள்விகளுக்கும் விடைகாண முடியாது. கேள்விகள் முடிவற்றவை. ஆகவே, வாழ்க்கையும். கேள்விகளை எதிர்கொள்ள ஒரே வழி விவாதிப்பதுதான். வெந்து தணிந்த காடுகள், வாழ்க்கையைப் பற்றிய அடிப்படை விவாதங்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு நாவல்.
உயிர்த் துடிப்புள்ள பாத்திரங்களைப் படைத்து, அவர்களை ஒருவரோடு ஒருவர் மோதவிட்டு, நெருப்புப் பொறி பறக்கும் விவாதங்களை உருவாக்குகிறார் இந்திரா பார்த்தசாரதி. பக்கங்களைப் புரட்டும்போதே கைவிரல்களில் தீப்பற்றிக் கொள்கிறது.” DRIVE