“Book Descriptions: மிகவும் மதிக்கப்பட வேண்டிய போராளியாகவும் எழுத்தாளராகவும் கலகக்காரியாகவும் இடையறாது இயங்குபவர் ஸர்மிளா ஸெய்யித். இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் இலங்கையில் நடத்தப்பட்ட கோரமான தற்கொலைத் தாக்குதல்களின் பிற்பாடு இலங்கை இஸ்லாமியச் சமூகம் எதிர்கொண்ட தீவிரமான இனவாத அரச ஒடுக்கு முறையையும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளாலும் இலங்கை அரசாலும் அவர் எதிர்கொண்ட எண்ணற்ற தாக்குதல்களையும் துணிவோடும், நளினமாகவும் மிகைப்படுத்தல்கள் இல்லாமலும் நினைவெழுதுதலாக இந்த நூலை உயிர்ப்போடு எழுதியிருக்கிறார் ஸர்மிளா. இது முடிந்த கதை அல்ல. தொடரும் துன்பியல் கதை. இலங்கையிலும் இந்தியாவிலும் இனி வரப் போகும் காலத்தைப் பற்றிய கதை இது. இது புனைவல்ல. வாழ்வெழுதல்.Sharmila Sayeed is a highly respected fighter, writer and rebel.” DRIVE