“Book Descriptions: செகோவ் எழுதிய நான்கு நீண்ட கதைகள் - குறுநாவல்களின் தொகுப்பு இது. 'வார்டு எண். 6', 'குடியானவர்கள்', 'மாடிவீடு' மற்றும் 'கறுப்பு துறவி' ஆகிய நான்கு குறுநாவல்கள். இவை அனைத்துமே செகோவ் அன்றைய ருசிய சமூக நிலைகளை விமர்சித்து எழுதிய கதைகள். இவை ஒவ்வொன்றிலும் அவர் வறுமை, மருத்துவம், லஞ்சம் என பலவற்றையும் பேசுகிறார். ‘தன்னை புரட்சியாளனாக மாற்றிய கதை’ என்று லெனின் பாராட்டிய கதை ‘வார்டு எண். 6’. சமூகத்தின் புரையோடிய நிறுவனங்களையும், அந்த நிறுவனங்களை அண்டிப் பிழைக்கும் அதிகாரிகளையும் மிகவும் தீவீரமாக தோலுரிக்கும் கதை. அது போலவே அன்றைய ருசியாவின் குடியானவர்களின் நிலையை எடுத்துக் கூறியது ‘குடியானவர்கள்’. அரசாலும், மற்றவர்களாலும் சுரண்டப்படும் அவர்கள் வாழ்வின் இறுதியில் கைகளை ஏந்தி பிச்சைக்காரர்களாகவே சமூகம் நிறுத்தி வைக்கிறது. ‘கறுப்புத் துறவி’ தன்னை மேதை என்றெண்ணிக் கொள்ளும் மனிதனின் கதை. அவனுடைய மனதின் பிறழ்வில் அவன் கறுப்புத் துறவியை சந்திக்கிறான். ‘மாடி வீடு’ ஒரு காதல் கதை. அல்லது கனவை மட்டும் துரத்தும் மனிதன் ஒருவனின் காதல் கதை. சமூகத்தில் சிறிதேனும் மாற்றத்தை கொண்டுவர முயலும் ஆசிரியைக்கும், வேலை எதுவும் செய்ய விரும்பாத கலைஞனுக்கும் இடையான மோதல், ஒன்று இந்தக் கதையை மிகவும் ரசிக்கவோ அல்லது வெறுக்கவோ செய்ய வைக்கும்.” DRIVE