“Book Descriptions: சுயநலத்தில் ஊறித் திளைப்பவர்கள் காதல் என்ற மெல்லுணர்வை கூடப் பகடையாக மாற்றி அதிலும் ஆதாயத்தையே தேடவே முயல்வர். ஏழை மாணவனான அன்பரசுவை காதலித்த பணக்கார பெண் ப்ரீத்தத்தால் தாயை இழந்தது மட்டுமில்லாமல் சிறை தண்டனையும் அனுபவித்தவன் தண்டனை காலம் முடிந்து மொழித்தெரியாத ஊரில் வேலைக்காரனாக வாழ்ந்து ஏழு ஆண்டுகளில் தன்னை உயர்த்திக் கொண்டு ப்ரீத்தத்தின் மேல் இருக்கும் வன்மத்தை குறைக்காமலே நாட்களைக் கடத்துகிறான். முதலாளியின் பெண்ணுடன் நிச்சயம் செய்த பிறகு ப்ரீத்தத்தைப் பழிவாங்க சென்னை வந்தவனிடம் அவள் போட்ட நாடகம் நன்றாகவே வேலை செய்கிறது. அவள் அப்பாவியோ என்று தடுமாறுபவனை வருங்கால மனைவி நேர்படுத்தி அவளின் குணத்தை மொத்தமாக அறியச் செய்கிறாள். தன்னை ஏமாற்றியவள் மோசமான கணவனுடன் தான் வாழ்கிறாள் என்று தெரிந்த பிறகே அன்பரசனால் தன் வருகால மனைவியின் பக்கம் காதல் பார்வை பார்க்க முடிகிறது.” DRIVE